கருவலூரில் 16-இல் கலாசார கலை விழா
By DIN | Published on : 14th January 2018 03:57 AM | அ+அ அ- |
கருவலூர் மாரியம்மன் கோயில் மைதானத்தில் கலாசாரக் கலை விழா ஜனவரி 16-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
பொங்கல் திருவிழாவையொட்டி, அவிநாசி தமிழர் பண்பாடு, கலாசாரப் பேரவை சார்பில், செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் இரவு 9 மணி முதல் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதில், தமிழரின் அருமை, பெருமைகள் என்ற தலைப்பில் பெ.சூரியநாராயணனின் சிறப்புரை, பாரம்பரிய கும்மியாட்டம், ஒயிலாட்டம், இசைச் சொற்பொழிவு, பெருஞ்சலங்கையாட்டம், பரத நாட்டியம், சிலம்பாட்டம், பண்ணும் பரதமும் நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.