சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு வீதி நாடகம்

தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, திருப்பூரில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு வீதி நாடகம் சனிக்கிழமை நடைபெற்றது.தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மாநகரப் போக்குவரத்துக்

தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, திருப்பூரில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு வீதி நாடகம் சனிக்கிழமை நடைபெற்றது.
தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, காந்தி நகர் ரோட்டரி சங்கம் சார்பில் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
மாநகரக் காவல் துணை ஆணையர் ஏ.கயல்விழி விழிப்புணர்வு நிகழ்வைத் தொடங்கி வைத்தார். மாநகரப் போக்குவரத்து உதவி ஆணையர் ராஜ்கண்ணா, வடக்கு சரக உதவி ஆணையர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்கும் போதும், ஒருவழிப் பாதையில் வாகனத்தை ஓட்டும் போதும் ஏற்படும் விபத்துகளை கல்லூரி மாணவர்கள் நடித்துக் காட்டினர்.
அதைத் தொடர்ந்து, அவ்வழியாக வந்த அணைத்து வாகனங்களிலும் முகப்பு விளக்குகளில் கறுப்பு வில்லை ஒட்டப்பட்டது. தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசாக பூ வழங்கப்பட்டது. சாலைப் பாதுகாப்பு வாசகம் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com