உடுமலையில் 220 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

உடுமலையில் வணிக நிறுவனங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

உடுமலையில் வணிக நிறுவனங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
உடுமலை நகராட்சிப் பகுதியில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஒரு சில கடைகளில் விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் புகார்கள் வந்தன. 
இதனடிப்படையில்,  நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
இதில், மத்திய பேருந்து நிலையம், பழனி பாதை, கல்பனா சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து,  அக்கடைகளில் இருந்த 220 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
இதுதொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு ரூ. 7,500 அபராதம் விதிக்கப்பட்டது. பொறியாளர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர்கள் எம்.சிவகுமார், ஆர்.செல்வம், ஆறுமுகம் உள்ளிட்டோர் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com