குடிநீர்க் கட்டண உயர்வைக் கண்டித்து  மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ஊத்துக்குளி பேரூராட்சியில் குடிநீர்க் கட்டணம், சொத்து வரி உயர்வு,  திடக்கழிவு சேவைக் கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்யக் கோரியும்,

ஊத்துக்குளி பேரூராட்சியில் குடிநீர்க் கட்டணம், சொத்து வரி உயர்வு,  திடக்கழிவு சேவைக் கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்யக் கோரியும்,  அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்குளி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  அக்கட்சியின் வட்டச் செயலாளர் சிவசாமி,  மாவட்டக் குழு உறுப்பினர் சரஸ்வதி,  வட்ட குழு உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். 
இதையடுத்து  ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை  மனு அளித்தனர். இதில் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பேருராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கிளை செயலாளர் காமராஜ்,  சசிகுமார், லட்சுமி,  லோகநாதன், வி.தொ.ச.தலைவர் மணியன், மாதர் சங்கத் தலைவர் அம்புஜம், சி.ஐ.டி.யூ உறுப்பினர்கள் மாரிமுத்து, சின்னசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com