177.25 டிஎம்சி காவிரி தீர்ப்புக்கு மறுபரிசீலனை தேவை

தமிழ்நாட்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்கிற காவிரி தீர்ப்புக்கு மறுபரிசீலனை தேவையென தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்கிற காவிரி தீர்ப்புக்கு மறுபரிசீலனை தேவையென தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்லசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி நடுவர் மன்றம் 1990-இல் அமைக்கப்பட்டு, 1991 இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி தண்ணீர் வரையறை செய்யப்பட்டது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு 2007 இறுதித் தீர்ப்பில் 192 டிஎம்சி உறுதி செய்யப்பட்டது. மேல்முறையீட்டுத் தீர்ப்பு 2018-இல் 172.25 டிஎம்சியாகக் குறைந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தொழில் பயன்பாட்டுக்காக 10 டிஎம்சி, பெங்களூரு குடிநீர்த் தேவைக்காக 4.75 டிஎம்சி என தீர்ப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நீரின் ஒருபகுதி ஆலைகளின் கழிவுநீராகவும், மாநகரச் சாக்கடை நீராகவும் தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி ஆற்றில் வடித்து விடப்படும் ஆபத்து உள்ளது.
தண்ணீர் வரையறையின்படி முதலிடம் குடிநீர் பயன்பாடு, அடுத்து விவசாயம், மூன்றாவது தொழில் துறையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 10 டிஎம்சி நீரை கர்நாடக தொழில் துறைக்குக் கொடுத்திருப்பது இயற்கை நியதிக்கு எதிரானதாகும். 
மாதாந்திர நீர்ப் பங்கீட்டு முறையை மாற்றி, தினசரி நீர்ப் பங்கீட்டு முறையைத் தீர்ப்பில் இடம்பெறச் செய்தால் மட்டுமே தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் கடைமடைப் பாசன உரிமைப்படி நீரைப் பெற முடியும்.
177.25 டிஎம்சி தீர்ப்பு தொடர்ந்து 15 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். இதன்மீது மேல்முறையீடு செய்ய முடியாதென தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தீர்ப்பின் தவறுகளில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com