உடுமலை சங்கர் சமூகநீதி அறக்கட்டளைத் தொடக்கவிழா

உடுமலையில் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான மார்ச் 13-ஆம் தேதியை ஒட்டி சங்கர் சமூக நீதி அறக்கட்டளைத் தொடக்கவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உடுமலையில் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான மார்ச் 13-ஆம் தேதியை ஒட்டி சங்கர் சமூக நீதி அறக்கட்டளைத் தொடக்கவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உடுமலை, குட்டைத் திடலில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் தலைமை வகித்தார். அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் முன்னிலை வகித்தார். 
அதைத் தொடர்ந்து சமூக நீதியில் பெண்கள் எனும் தலைப்பில் மனிதி அமைப்பின் நிர்வாகி சுசீலா ஆனந்த், கக்கூஸ் ஆவணப் பட இயக்குநர் திவ்யா, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத் தலைவர் வளர்மதி, சமூகச் செயற்பாட்டாளர் ஷாலினி மரியா லாரென்ஸ் ஆகியோர் பேசினர்.
இவ்விழாவில் சங்கரின் மனைவி கௌசல்யா பேசியதாவது:
சாதி ஒழிக தமிழ் வெல்க என்பதுதான் சங்கர் அறக்கட்டளையின் குறிக்கோள். அதற்காகப் பொ றுமையாகவும், நிதானமாகவும் உழைப்பேன். புகழுக்கும், அதிகாரத்துக்கும் இந்த அறக்கட்ட ளையில் இடமில்லை. பாட்டாளி சமூகத்துக்காக வாழ்நாள் முழுவதையும் அர்பணிக்க உள்ளேன். ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு தனிச் சட்டத்தை இயற்றவேண்டும். இதுவே சங்கர் மரணத்துக்கான நீதியாகும். என் வாழ்வின் முக்கியமான தருணம் இது என்றார்.
இதை தொடர்ந்து சங்கர் சமூக நீதி அறக்கட்டளை அறிமுகமும், நோக்கம் எனும் புத்தகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு வெளியிட்ட அதை மனித உரிமைச் செயற்பாட்டாளரும், பேரரறிவாளனின் தாயாருமான அற்புதம்மாள் பெற்றுக் கொண்டார். 
விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் வன்னியரசு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை கு.ராமகிருட்டிணன், மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com