சிறப்பு இலவச மருத்துவ முகாம்

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குடிமங்கலம் ஒன்றியம், கொங்கல் நகரம் ஊராட்சியில் தமிழக அரசின்

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குடிமங்கலம் ஒன்றியம், கொங்கல் நகரம் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.அசோகன் முன்னிலை வகித்தார். 
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முகாமைத் தொடக்கிவைத்தார். இம்முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை நோய், இருதய நோய், பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், புற்று நோய், பால்வினை நோய், குடும்ப மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம், எலும்பு - மூட்டு நோய் மருத்துவம், காச நோய் மருத்துவம், இசிஜி, ரத்தம், சிறுநீர்ப் பரிசோதனைகள், சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. 
இம்முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுப் பயன்பெற்றனர். இதில், உடுமலை வட்டாட்சியர் தங்கவேல், குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் கீதாராணி மற்றும் அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com