பல்லடம் அருள்புரத்தில் துர்கா பூஜை வழிபாடு தொடக்கம்

பல்லடம் அருள்புரத்தில் வடமாநில நவராத்திரி துர்கா பூஜை வழிபாடு அண்மையில் தொடங்கியது. 

பல்லடம் அருள்புரத்தில் வடமாநில நவராத்திரி துர்கா பூஜை வழிபாடு அண்மையில் தொடங்கியது. 
பல்லடம் பகுதியில் பின்னலாடை, விசைத்தறி, கோழிப் பண்ணை நிறுவனங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். பல்லடம் அருள்புரத்தில் நவ துர்கா பூஜா சமிதி சார்பில் நவராத்திரி துர்கா பூஜை விழா துவங்கியது. 
இதற்காக சிலை பிரதிஷ்டை செய்ய கொல்கத்தா, காளிகாட் பகுதியில் இருந்து அருள்புரத்துக்கு களிமணி எடுத்து வந்து ரூ. 1 லட்சம் செலவில் விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி மற்றும் மகிஷாசுரனை வதம் செய்யும் துர்கா தேவி சிலைகள் உருவாக்கப்பட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். 
இவ்விழாவில் சயலபுத்ரி தேவி பூஜை, பிரம்மசாரணி தேவி பூஜை, பிரமசாரணி தேவி தர்ஷன், சந்திரகண்டா தேவி பூஜை, குஷ்மண்டா தேவி பூஜை, ஷ்கந்தமாதா தேவி பூஜை, காத்யாயனி தேவி பூஜை, மஹாகாளி தேவி பூஜை, மஹா அஷ்டமி பூஜை (கௌரி பூஜை), மஹா நவமி சித்தி தாத்ரி பூஜை மற்றும் ஹோமம் நடைபெறவுள்ளது. 
தொடர்ந்து, அக்டோபர் 19ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை பூஜையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை பஜனையும் நடைபெறும். 
 18ஆம் தேதி வரை துர்கா தேவி முகம் மறைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் சூரனை வதம் செய்ய துர்கா தேவி கண்கள் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். 19ஆம் தேதி இரவு 9 மணி முதல் முழு இரவு பஜனை நடைபெறும். 20ஆம் தேதி பவானி கூடுதுறையில் சிலை கரைக்கப்பட்டு விழா நிறைவு செய்யப்படவுள்ளது. 
இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் வடமாநிலத் தொழிலாளர்கள், உள்ளூர் மக்கள் பங்கேற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com