ஏழுமலையான் கோயிலில் பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தமிழக - கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலில்

தமிழக - கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக - கேரள எல்லையில் அட ர்ந்த வனப் பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 
இந்நிலையில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை ஒட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் ந டைபெற்றன. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர்.  பக்தர்கள் வசதிக்காக தமிழ்நா டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் உடுமலையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் காவல்துறை, வனத் துறை, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் என நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப் பேரவைத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆகியோர் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டனர்.
வள்ளியிரச்சல் வரதராஜப் பெருமாள் கோயிலில்...
வெள்ளக்கோவில் அருகே உள்ள வள்ளியிரச்சல் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி  சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் கோயிலில் வீற்றிருக்கும் முத்தேவிகள் சமேத வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com