முத்தூர் விற்பனைக் கூடத்தில் 7.60 டன் தேங்காய் விற்பனை

முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 7.60 டன் தேங்காய் மற்றும் கொப்பரைகள் சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டன.

முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 7.60 டன் தேங்காய் மற்றும் கொப்பரைகள் சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டன.
இங்கு 18,575 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.16.35க்கும், அதிகபட்சமாக ரூ.27.10க்கும் விற்பனையானது. சராசரி விலை ரூ.25.30. மொத்தம் ரூ. ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 537க்கு விற்பனையானது.
கொப்பரை 290 கிலோ வரத்து இருந்தது. இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.50.10 முதல் அதிகபட்சமாக ரூ.85.40 வரை விற்பனையானது. 
மொத்தம் ரூ.21 ஆயிரத்து 889க்கு விற்பனையானது. மொத்தத்தில் 7.60 டன் தேங்காய் மற்றும் கொப்பரை விற்பனையானது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.2.10 லட்சம் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பட்டுவாடா செய்யப்பட்டதாக விற்பனைக் கூட மேற்பார்வையாளர் ஸ்ரீரங்கன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com