திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத்  திருத்தம் - 2019, மாவட்டத்தில் உள்ள அனைத்து

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத்  திருத்தம் - 2019, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட  வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் - 2019 தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமை வாக்காளர் பட்டியல் சிறப்புப் பார்வையாளர் சுன் சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.  
இதில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,482 வாக்குச் சாவடிகளை உள்ளடக்கிய 1,028 வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. 
இதில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர்  பட்டியலில்  உள்ள பதிவுகளில் திருத்தம், பெயர் நீக்கம், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு விண்னப்பித்தனர். 
இதற்கிடையே வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 
வாக்காளார் பட்டியல் சிறப்புப் பார்வையாளர் சுன் சோங்கம்  ஜடக் சிரு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். 
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, சார் ஆட்சியர்கள் ஷ்ரவண்குமார்(திருப்பூர்), கிரேஸ் பச்சாவு (தாராபுரம்), திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார், தேர்தல் வட்டாட்சியர் முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com