திருப்பூர் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

திருப்பூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர் ஒன்றியம், பள்ளிபாளையத்தில் அண்ணா சிலைக்கு திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சாமிநாதன், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் எஸ்.எம்.பழனிசாமி, ஒன்றியப் பாசறைச் செயலாளர் சந்திரசேகர், பொங்குபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் வடிவேல், மூர்த்தி, கூட்டுறவுச் சங்கத் தலைவர் எவரெடி துரை, பொறுப்பாளர் ஐஸ்வர்ய மஹராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காங்கயத்தில்...
திமுக காங்கயம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் ஆலாம்பாடி ஊராட்சி, கல்லேரியில் அண்ணாவின் உருவப் படத்துக்கு ஒன்றியச் செயலாளர் என்.எஸ்.சிதம்பரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சக்திவடிவேல், ஆலாம்பாடி ஊராட்சிச் செயலாளர் விஜயகுமார், ஊராட்சி முன்னாள் தலைவர் ரங்கசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காங்கயம் நகர திமுக சார்பில், அய்யாசாமி நகர் காலனியில் அண்ணாவின் உருவப் படத்துக்கு நகரச் செயலாளர் ஏசிஜி.மணிவண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நெசவாளர் அணியின் துணை அமைப்பாளர் சேமலையப்பன், நகரத் துணைச் செயலாளர் மகேஸ்வரி, மாவட்டப் பிரதிநிதி சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வெள்ளக்கோவிலில்...
வெள்ளக்கோவிலில் திமுக சார்பில் நகரச் செயலாளர் கே.ஆர்.முத்துகுமார் தலைமையில் அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதிய நீதிக் கட்சி சார்பில்...
வெள்ளக்கோவில், அக்கரைப்பாளையத்தில் புதிய நீதிக் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் கு.தங்கத்தம்பி, மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.செளந்தர்ராஜன், மாவட்ட இணைச் செயலாளர் ஏ.ராமலிங்கம் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பல்லடத்தில்...
பல்லடம் திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், நகரப் பொறுப்பாளர் எம்.லோகநாதன், நகரத் துணைச் செயலாளர் சம்பத், நகராட்சி முன்னாள் தலைவர் பி.ஏ.சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com