குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகப் புகார்: உடுமலை அருகே பொதுமக்கள் சாலைமறியல்

உடுமலை அருகே குடிநீரில் சாக்கடைக் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறிய பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை அருகே குடிநீரில் சாக்கடைக் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறிய பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலையை அடுத்த மடத்துக்குளம் வட்டம், கொழுமம் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு அமராவதி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில் கடந்த சில நாள்களாக குடிநீர் குழாயில் சாக்கடைக் கழிவுநீர் கலந்து வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கொழுமம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் அலுவலர்கள் யாரும் இது குறித்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழுமம் பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த வழியாக வாகனங்கள் எ துவும் செல்ல முடியவில்லை. குறிப்பாக பள்ளி நேரத்தில் நடந்த இந்த போராட்டத்தால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நின்றன. 
இதையடுத்து குமரலிங்கம் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்களை சமாதானப்படுத்தினர். ஆனா லும் பொதுமக்கள் சாலை மறியலை கைவிடவில்லை. இதைத் தொடர்ந்து மடத்துக்குளம் ஒன்றிய ஆணையாளர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து  பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஓரிரு நாள்களில் குடிநீர் விநியோகம் சீரடையும் என உறுதி மொழி கொடுத்தனர். 
இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com