"ழகரம்' இலக்கிய அமைப்பு பல்லடத்தில் கவிதை அரங்கேற்றம்

பல்லடத்தில் "ழகரம்' இலக்கிய அமைப்பின் கவிதை அரங்கேற்றம் மற்றும் நகைச்சுவைப் பட்டிமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

பல்லடத்தில் "ழகரம்' இலக்கிய அமைப்பின் கவிதை அரங்கேற்றம் மற்றும் நகைச்சுவைப் பட்டிமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பனப்பாளையம் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.  நாயன்மார் நற்றமிழ்ச் சங்க நிறுவனர் காந்த், மதுரை சங்கத் தமிழ் பூங்கா நிறுவனர் பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் மகிழ்வேல் பாண்டியன் வரவேற்றார். 
"விடுதலைப் போரின் வேர்கள்' என்ற தலைப்பில் ரேணுகா சுந்தரம், சந்திஷா, பாக்கியலட்சுமி, மகாலட்சுமி, இந்திராணி உள்ளிட்ட பெண் கவிஞர்கள் கவிதை பாடினர். அதைத் தொடர்ந்து கவிஞர்கள் ஜாகீர் உசேன், கேசவதாஸ், சக்தீஸ்வரன், சுப்பையா, கனகசுப்புராஜ் உள்பட பலர் பேசினர். அதைத் தொடர்ந்து நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் சிறந்த முகநூல் கவிஞர்கள் 13 பேருக்கு முகநூல் தமிழ்க் காவலர் விருது வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் பங்கேற்று கவிஞர்களுக்குப் பரிசு வழங்கிப் பேசினர். ழகரம் இலக்கிய அமைப்பின் பொருளாளர் சஞ்சய் ஹரி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com