நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய வலியுறுத்தல்

தருமபுரி வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய வலியுறுத்தல்

தருமபுரி வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இது குறித்து, தருமபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சொர்ணமாணிக்கம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி வட்டாரத்தில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், மத்திய அரசின் புதிய காப்பீடு திட்டமான பிரதமரின் பால் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் தங்களது பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்.

இதன் மூலம், இயற்கை இடற்படுகளாக வறட்சி, புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, காப்பீட்டுத் தொகையை தங்களது வங்கிக் கணக்கு மூலம் பெற முடியும்.

இதற்காக, நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 368 பிரிமியம் செலுத்தினால் காப்பீட்டுத் தொகையாக ரூ.24,500 பெறலாம். நெற்பயிருக்காக கடன் பெற்றுள்ள விவசாயிகளும் இத்திட்டத்தில் சேரலாம்.


எனவே, வருகிற நவம்பர் 30-ஆம் தேதிக்குள் விவசாயிகள் தேசிய, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com