பைசுஅள்ளியில் "அம்மா' திட்ட முகாம்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தைச் சேர்ந்த பைசுஅள்ளி கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தைச் சேர்ந்த பைசுஅள்ளி கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
 முகாமையொட்டி சுகாதாரப் பணிகள் துறை, சமூக நலத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, தோட்டக் கலைத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
 நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியது: மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கிராமத்தில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் ரூ.7.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 600 கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 150 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. கால்வாய்களைத் தூர்வார ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
 முகாமில், வட்டாட்சியர் கண்ணன், வருவாய் உதவி ஆய்வாளர் காமராஜ், கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் கெüதம், கிராம நிர்வாக அலுவலர் கோகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com