களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்: ஆட்சியர்

களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வலியுறுத்தியுள்ளார்.

களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வலியுறுத்தியுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: விநாயகர் சதுர்த்தியின்போது, ஆண்டுதோறும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால், அண்மைக்காலமாக பிளாஸ்டர் ஆப் பாரிஸினால் செய்யப்பட்டு, ரசாயன வண்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை வழிபட்ட பின்னர் அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசடைகின்றன.
 எனவே, பொதுமக்கள், களிமண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாத மற்றும் எவ்வித ரசாயனக் கலவைகளும் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். இத்தகைய சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்கலாம். ரசாயன வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
 தருமபுரி மாவட்டத்தில் வாணியாறு அணை, வறட்டாறு அணை, ஈச்சம்பாடி அணை, தென்பெண்ணையாறு ஆற்றுப் பகுதி, ஒகேனக்கல் காவிரியாறு ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com