திருந்திய நெல் சாகுபடி பயிற்சி

தருமபுரி, நல்லம்பள்ளி வட்டார விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடி குறித்த பயிற்சி பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி, நல்லம்பள்ளி வட்டார விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடி குறித்த பயிற்சி பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 வேளாண் துணை இயக்குநர் (பொ) உழவர் பயிற்சி நிலையம் மு.இளங்கோவன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பா.ச.சண்முகம், நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார். திருந்திய நெல் சாகுபடி மற்றும் சாதாரண நடவுக்கு உள்ள வேறுபாடுகள், விதைத் தேர்வு முதல் நிலம் தயாரிப்பு, நீர் நிர்வாகம், உர மேலாண்மை, களை மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் தொடர்பாக விவசாயிகளுக்கு படம் மூலம் விளக்கமளிக்கப்பட்டது.
 இதில், வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மகேஸ்வரி, அருண்குமார், சிவசங்கரி, உதவி தொழில்நுட்ப மேலாளர் பரமசிவம் மற்றும் 120 விவசாயிகள்
 கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com