விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், புதன்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், புதன்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நல்லம்பள்ளி ஒன்றியச் செயலர் என். பி. ராஜூ தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜெ. பிரதாபன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தலித் மக்களின் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை நாள்களை 200-ஆகவும், ஊதியம் ரூ. 400-ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், என்.முருகேசன், ஒன்றிய செயலர்கள் மாதையன்,  பச்சாக்கவுண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில்... தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆர்.சேகர் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சிவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வீடு இல்லாதவர்களுக்கு எட்டு சென்ட் பரப்பளவில் வீட்டுமனை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அளிப்புத் திட்டத்தில் வேலை நாள்களை 200 ஆக உயர்த்த வேண்டும். இந்தத் திட்டத்தில் தினசரி ஊழியம் ரூ. 400 அளிக்க வேண்டும்.  தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நிதியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com