வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கும் பணி டிச. 15 வரை நீட்டிப்பு

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலில் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் விவரங்களை வீடுவீடாகச் சென்று சரிபார்க்கும் பணி

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலில் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் விவரங்களை வீடுவீடாகச் சென்று சரிபார்க்கும் பணி வரும் டிச. 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார்.
 இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: தருமபுரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற்று வந்தன.
 விடுபட்ட தகுதிவாய்ந்த நபர்களைக் கண்டறிந்து சேர்க்கவும், இறந்த மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களைக் கண்டறிந்து நீக்கம் செய்யவும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், ஒவ்வொரு பாகத்திலும் உள்ள பிரிவுகளை ஒருங்கிணைக்கவும், குடும்பங்களையும், குடும்ப உறுப்பினர்களையும் ஒருங்கிணைக்கவும் வீடுவீடாகச் சென்று சரி பார்க்கும் பணியும் நடைபெற்று வந்தது.
 இப்பணிகள் வரும் டிச. 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. வரும் 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது நிரம்பியவர்கள் பட்டியலில் சேர்ந்துக் கொள்ளவும், அக்டோபர் 3-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 இப்பணிகள் முடிவடைந்து, வரும் ஜனவரி 10-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர்கள் இது தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கட்டணமில்லாத தொலைபேசி எண் 1077-இல் அழைத்து அறிந்து கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com