சித்தேரியில் நிழல் கூடம் அமைக்க வலியுறுத்தல்

சித்தேரியில் நிழல் கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

சித்தேரியில் நிழல் கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சியில் மூலேரிக்காடு, பேரேரிபுதூர், சூரியக்கடை, தோல்தூக்கி, மாம்பாறை,  மெதிக்காடு, பாறைவளவு, நொச்சிக்குட்டை உள்ளிட்ட 61 குக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராம மக்கள் அரூர்-சித்தேரி சாலையை பயன்படுத்துகின்றனர்.
சித்தேரி மலைத் தொடரில் சுமார் 10 கி.மீ. தூர தார்ச் சாலை மலைப் பகுதியில் செல்கிறது. 
இந்த சாலையில் உள்ள சூரியக்கடை பிரிவில் நாள்தோறும் பேருந்துக்காக பயணிகள் பலர் காத்திருக்கின்றனர். 
இங்கு ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த நிழல் கூடம் சேதமடைந்து விட்டதால், பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் வெயில் மற்றும் மழையால் பாதிக்கின்றனர்.
எனவே, சூரியக்கடை பிரிவு சாலையில் புதிதாக நிழல் கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சித்தேரி மலைப் பகுதியிலுள்ள பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com