சந்திராபுரத்தில் 'அம்மா' திட்ட முகாம்

அரூரை அடுத்த சந்திராபுரத்தில் 'அம்மா' திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரூரை அடுத்த சந்திராபுரத்தில் 'அம்மா' திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வருவாய்த் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில், அரூர் வட்டாட்சியர் கே.பரமேஸ்வரி தலைமை வகித்தார்.
இதில், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, புதிய குடும்ப அட்டைகள், ஜாதிச் சான்று, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், தெருவிளக்குகள், குடிநீர் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 36 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 20 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கண் மருத்துவ உதவியாளர் கு.கலையரசன் கண் பரிசோதனைகளை மேற்கொண்டார். தொடர்ந்து, சுகாதாரத் துறையினர் சார்பில், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், தனி வட்டாட்சியர் சித்ரா, வட்ட வழங்கல் அலுவலர் கனிமொழி, வருவாய் ஆய்வாளர் ஆ.சிவஞானம், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பத், சிவக்குமார், கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பசுவாபுரம் ஊராட்சி ஆத்தூரில் நடைபெற்ற முகாமில், 39 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com