பாமக 29-ஆம் ஆண்டு தொடக்க விழா
By அரூர், | Published on : 17th July 2017 09:40 AM | அ+அ அ- |
பாட்டாளி மக்கள் கட்சியின் 29-ஆம் ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் 29-ம் ஆண்டு தொடக்க விழாவில், கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலர் ஏ.வி.இமயவர்மன் தலைமை வகித்தார். விழாவில், கட்சி கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை பாமகவினர் வழங்கினர்.
விழாவில், ஒன்றியத் தலைவர் ராம. அறிவழகன், ஒன்றிய செயலர் முருகேசன், நிர்வாகிகள் பழனி, கோவிந்தராஜ், கேசவன், மா.ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பாமகவினர் கட்சி கொடியேற்றி வைத்தனர்.