உரம் விற்பனை செய்ய கையடக்க கருவி வழங்கல்

தருமபுரியில் உரம் விற்பனை செய்ய கையடக்கக் கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

தருமபுரியில் உரம் விற்பனை செய்ய கையடக்கக் கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
 தருமபுரி மாவட்டத்தில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆதார் அட்டை அடிப்படையில், விற்பனை முனையம் கருவி மூலம் மட்டுமே விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
 மாவட்டத்தில் 132 கூட்டுறவு கடன் சங்கங்கள், 259 தனியார் விற்பனையாளர்கள் என மொத்தம் 391 உர விற்பனை நிலையங்கள் உள்ளன. முதல் கட்டமாக, 132 கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இக்கருவிகள் வரப்பெற்றுள்ளன. இக்கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி முகாம் தருமபுரியில் நடைபெற்றது.
 இந்த நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநர் ஆர்.ஆர்.சுசிலா, ஊழியர்களுக்கு கையடக்கக் கருவிகளை வழங்கினார். மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் கி. ரேணுகா, மாவட்டக் கூட்டுறவு துணைப் பதிவாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com