அச்சல்வாடியில் லாரி மூலம் குடிநீர் வழங்க கோரிக்கை

அரூரை அடுத்த அச்சல்வாடியில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரூரை அடுத்த அச்சல்வாடியில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 அரூர் ஒன்றியம், அச்சல்வாடியில் 400-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. கிராம மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
 தற்போது வறட்சி காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல ஒகேனக்கல் குடிநீரும் கிடைப்பதில்லையாம்.
 இதனால் கிராம மக்கள் ஊருக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அச்சல்வாடி ஊராட்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இருவர் டிராக்டர் மூலம் இலவசமாக குடிநீர் வழங்கி வருகின்றனர்.
 எனினும், இந்த குடிநீர் பொதுமக்களின் தேவையை நிறைவு செய்யவில்லையாம். எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலம் நாள்தோறும் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.கிருஷ்ணன் கூறுகையில், அச்சல்வாடியில் புதியதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, குடிநீர் வழங்கும் திறந்தவெளிக் கிணறுகளும் சீரமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com