அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பயன்படுத்த வலியுறுத்தல்

அரூர் அரசு மருத்துவமனைக்குச் சொந்தமான நிலத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அரூர் அரசு மருத்துவமனைக்குச் சொந்தமான நிலத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 இதுதொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் மோப்பிரிப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜலட்சுமி தீத்து அளித்த கோரிக்கை மனு விவரம்:
 அரூர் அரசு மருத்துவமனை 1980-ல், அரூர் சந்தைமேடு வளாகம் அருகே அமைந்திருந்தது. பிறகு வட்டார தலைமை மருத்துமனையாக மேம்படுத்தும் நோக்கில் சந்தைமேட்டில் இருந்து அரூர்-மொரப்பூர் சாலையில் மோப்பிரிப்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டது.
 தற்போது அரூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ள வளாகம் ஏற்கனவே வனத்துறைக்கு சொந்தமான இடமாக இருந்தது. இந்த நிலையில், வனத்துறைக்கு வேறு இடத்தினை வழங்கிவிட்டு, சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அரூர் அரசு மருத்துவமனைக்கு தொடங்கப்பட்டது.
 அரூர் அரசு மருத்துவமனை 24 மணி நேரம் இயங்கக்கூடிய தாய், சேய் நல மருத்துவமனையாகும். அதேபோல், இந்த மருத்துவமனை தேசிய தரச்சான்று பெறுவதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.
 அரூர் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 800-க்கும் அதிகமான புறநோயாளிகளும், 100-க்கும் அதிகமான உள் நோயாளிகளும் சிகிச்சைப் பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் 20 மருத்துவர்கள், 60 செவிலியர்கள் உள்பட சுமார் 100-க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
 இந்த நிலையில், அரூர் அரசு மருத்துவமனைக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் 5 ஏக்கர் நிலம் மட்டுமே மருத்துவ நிர்வாகத்தின் பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 5 ஏக்கர் நிலம் பயன்பாடின்றி முள்புதர்கள் வளர்ந்துள்ளன.
 எனவே, இந்த நிலத்தை மருத்துவமனையின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com