பழுதான மின் கம்பங்களை சீரமைக்க வலியுறுத்தல்

அரூர் அருகேயுள்ள எல்லப்புடையாம்பட்டியில் பழுதான மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

அரூர் அருகேயுள்ள எல்லப்புடையாம்பட்டியில் பழுதான மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
 இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு அக்கிராம மக்கள் சார்பில் அன்பழகன் அனுப்பிய மனு விவரம்:
 அரூர் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் 300-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமம் வழியாக சித்தேரி மலைப்பகுதிக்கு செல்லும் உயர்மின் அழுத்த மின் கம்பிகள் செல்கின்றன.
 இந்த மின் கம்பிகள் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். போதிய பராமரிப்பு இல்லாத நிலையில், சித்தேரி செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகள் அறுந்து மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கீழே விழுகிறது.
 இதனால் மழைக்காலங்களில் பலத்த காற்று வீசும் போது உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதுதொடர்பாக மின் வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 எனவே, எல்லப்புடையாம்பட்டியில் பழுதான நிலையில் உள்ள உயர்மின் அழுத்த மின் கம்பங்களை மாற்றம் செய்து 30 அடி உயரம் கொண்ட மின் கம்பங்களை அமைக்க வேண்டும். சித்தேரி மலைப் பகுதிக்குச் செல்லும் உயர் மின் அழுத்த மின் கம்பிகளின் கீழ்பகுதியில் பதுகாப்பான கம்பி வலைகளை அமைக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com