ராணுவத்தில் அதிகாரி பணியிடம்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவ அகாதெமியில் 390 முப்படை அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார்.

இந்திய ராணுவ அகாதெமியில் 390 முப்படை அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய ராணுவ அகாதெமியில் 390 அதிகாரி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வு மூலம் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவர்.
இந்திய மிலிட்டரி அகாதெமியில் 208 பேரும், கடற்படை அகாதெமியில் 55 பேரும், விமானப்படை அகாதெமியில் 72 பேரும், நேவல் அகாதெமியில் 55 பேரும் சேர்க்கப்பட உள்ளனர்.  
விண்ணப்பதாரர்கள் ஜனவரி 2, 1999 மற்றும் ஜனவரி 1, 2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். 10, பிளஸ் 2 முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் (இயற்பியல், கணிதம் பாடங்கள் பிரிவை படித்திருக்க வேண்டும்.)
மேலும், உடற்தகுதிகள், கல்வித் தகுதிகள், தேர்வு செய்யும் முறை, கட்டண விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை தொடர்பான விரிவான விபரங்கள் www.joinindianarmy.nic.in., www.upsc.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், விண்ணப்பங்கள் வருகிற ஜூன் 30-ஆம் தேதிக்குள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com