டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி நெருப்பூர் மக்கள் மனு

தருமபுரி மாவட்டம், நெருப்பூரில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தருமபுரி மாவட்டம், நெருப்பூரில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
 பென்னாகரம் வட்டம் ஏரியூரை அடுத்த நெருப்பூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திங்கள்கிழமை திரளாக வந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
 அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
 நெருப்பூரில் நெடுஞ்சாலையை ஒட்டி நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பாக டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. மதுக்கடைக்கு அருகே கூட்டுறவு வங்கி, தனியார் பள்ளி உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்நிலையில் மதுக்கடைக்கு வருவோர் இப்பகுதியில் நடமாடும் பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
 இந்தக் கடையை அகற்ற வலியுறுத்தி ஏற்கெனவே முற்றுகைப் போராட்டம் நடத்திய நிலையில் தாற்காலிக சமாதானம் பேசி அனுப்பிய அதிகாரிகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லை. எனவே, மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடையை மூட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com