கல்லூரிகளில் இளம் வாக்காளரைச் சேர்க்கும் சிறப்பு முகாம்

தருமபுரி மாவட்டத்தில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அனைத்து கல்லூரிகளிலும் விடுபட்ட மற்றும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும்

தருமபுரி மாவட்டத்தில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அனைத்து கல்லூரிகளிலும் விடுபட்ட மற்றும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான கே. விவேகானந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு
1999,ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்பு பிறந்த இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்குதல் சிறப்பு முகாம் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் அந்தந்தப் பகுதி தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆலோசனை மேற்கொண்டு சிறப்பு முகாம்களுக்கான தேதிகளை நிர்ணயம் செய்ய வேண்டும். கல்லூரிகளில் குறைந்தது 4 மாணவர்களுக்கு ஆன்லைனின் விண்ணப்பித்தல் தொடர்பாக பயிற்சி அளிக்க வேண்டும்.
எத்தனைக் கல்லூரிகளில் இணையதள வசதியுடன் கூடிய கணினி மையங்கள் உள்ளன என்பதை கண்டறிய வேண்டும். இணையதள வசதியில்லாத கல்லூரிகளுக்கு மடிக்கணினியுடன் ஒரு அலுவலரை நியமனம் செய்ய வேண்டும். முகாம் நடத்தப்படும் தேதியை குறிப்பிட்டு முன்கூட்டியே கல்லூரிகளில் விளம்பரப் பதாகைகள் வைக்க வேண்டும்.
அனைத்து மாணவர்களும் அடையாள அட்டையுடன் வேண்டும் என்பதையும் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.
ஏற்கெனவே வாக்காளர் அட்டையை வைத்திருக்கும் மாணவர்களிடம், அந்த அட்டையின் எண்ணை 1950 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பச் சொல்ல வேண்டும். அதிலிருந்து பதில் எதுவும் கிடைக்கப்பெறாதவர்கள்  இணையதள முகவரியில் பெயர்களைத் தேட வேண்டும். அதிலும் பெயர் கிடைக்காதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம்.
இரண்டு அல்லது மூன்று நாள்களில் அனைத்து மாணவர்களையும் விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வயது ஆதாரத்துக்கு ஆதார் அட்டை, கல்லூரி அடையாள அட்டை அல்லது தொடர்புடைய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். சிறப்பு முயற்சியாக கல்லூரி விடுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவரவர் வீட்டு முகவரியைத் தந்து பதிவு செய்ய வேண்டும்.
தமிழகம் அல்லாத பிறாநில மாணவர்கள்  விண்ணப்பிக்கலாம்.
அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் தங்களது கல்லூரியில் 18 முதல் 21 வயதுள்ள எந்தவொரு மாணவ, மாணவிகளும் விடுபடவில்லை என்று உரிய படிவத்தில் சான்றளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com