ஒகேனக்கல்லில் ரூ.3 லட்சத்தில் தயாராகிவரும் "பசுமை அங்காடி'

ஒகேனக்கல் அருவிக்குச் செல்லும் வழியில், ரூ.3 லட்சத்தில் "பசுமை அங்காடி' ஒன்றை வனத் துறை அமைத்து வருகிறது.
ஒகேனக்கல்லில் ரூ.3 லட்சத்தில் தயாராகிவரும் "பசுமை அங்காடி'

ஒகேனக்கல் அருவிக்குச் செல்லும் வழியில், ரூ.3 லட்சத்தில் "பசுமை அங்காடி' ஒன்றை வனத் துறை அமைத்து வருகிறது.
 வனப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வாழும் மக்களை ஒருங்கிணைத்து, வனக் குழுக்களை உருவாக்கி (மகளிர் குழுக்களைப் போல) அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகள் வனத் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன.
 இவற்றில் ஒன்றாகத்தான், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் "ஊட்டமலை வனக் குழு' அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் மூலம், ஏற்கெனவே முதலைப் பண்ணை வளாகத்துக்குள் ஒரு "பசுமை அங்காடி' (ங்ஸ்ரீர் ள்ட்ர்ல்) அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒகேனக்கல் அருவிக்குச் செல்லும் வழியில் ஒரு பசுமை அங்காடி கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் மார்ச் 21-ஆம் தேதி உலக வன நாளன்று இந்த அங்காடி திறக்கப்படவுள்ளதாக கூறுகிறார் மாவட்ட வன அலுவலர் க. திருமால்.
 இதில் சூழல் சுற்றுலாவை மையப்படுத்தி தயார் செய்யப்படும் "டீ சர்ட்டுகள்', தொப்பிகள், வனப் பகுதியில் கிடைக்கும் பொருள்களால் தயார் செய்யப்படும் விளையாட்டுப் பொருள்கள், எல்லாவகை நோய்களுக்கும் தீர்வாக நம்முடைய பாரம்பரிய மூலிகைப் பொடிகள் ஆகியவற்றை விற்பனைக்கு வைக்க உள்ளோம் என்கிறார் அவர்.
 "ஊட்டமலை மக்களைக் கொண்ட வனக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியில் இருந்து தொடங்கப்படும் இந்த அங்காடியின் வருமானமும் அந்தக் குழுவையே சென்றடைகிறது' என்கிறார் உதவி வனப் பாதுகாவலர் பிரியதர்ஷினி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com