அரசநத்தம், கலசப்பாடிக்கு தார்சாலை கோரி உண்ணாவிரதம்

அரசநத்தம், கலசப்பாடி கிராமங்களுக்கு தார்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு இந்து மலையாளி (எஸ்.டி) விவசாய முன்னேற்ற சமூக சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசநத்தம், கலசப்பாடி கிராமங்களுக்கு தார்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு இந்து மலையாளி (எஸ்.டி) விவசாய முன்னேற்ற சமூக சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சங்க மாநிலத் தலைவர் டி.வேலாயுதம் தலைமை வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சிக்கு உள்பட்ட அரசநத்தம், கலசப்பாடி, கோட்டக்காடு, ஆலமரத்துவளவு, கருக்கம்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.
 இங்குள்ள மலைக் கிராமங்களுக்கு தார்சாலை வசதியில்லை. இதனால் பள்ளி மாணவர்கள், விவசாயிகள், கர்ப்பிணி உள்ளிட்டோர் பல்வேறு இன்னல்களை அடைகின்றனர். எனவே வாச்சாத்தியில் இருந்து அரசநத்தம், கலசப்பாடிக்கு 7 கிலா மீட்டர் தொலைவு தார்சாலை அமைக்க வேண்டும்.
 மலைக்கிராமங்களில் பிஎஸ்என்எல் டவர் அமைக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட பழங்குடியின விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
 இதில், சங்க மாநில பொதுச் செயலர் பொ.பா.ராமசாமி, மாவட்டத் தலைவர் ஏ.சிவக்குமார், மாவட்ட செயலர் வி.திருப்பதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னாண்டி, ஒன்றியத் தலைவர் ராமன், இளைஞர் அணித் தலைவர் பாண்டுரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com