மாவட்டத்தில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

தருமபுரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
 தருமபுரி மாவட்டத்தில் 208 அரசுப் பள்ளிகள், 66 மெட்ரிக் பள்ளிகள் உள்பட மொத்தம் 302 பள்ளிகள் உள்ளன. இதில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டத்தில், 56 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 118 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளன.
 இந்த நிலையில், தருமபுரி நகரில் உள்ள அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 180 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 89 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இப் பள்ளி 49.44 சதவீதத் தேர்ச்சிப் பெற்று மாவட்டத்தில் இறுதி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.  இதேபோல, தருமபுரி ஒளவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 582 மாணவியர் தேர்வு எழுதியதில், 531 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றனர்.
மாவட்டத்தில் பென்னாகரம், அரூர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மிகக் குறைவாக உள்ள மலைக் கிராமங்களில் உள்ள பல்வேறு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற நிலையில், நகரத்தில் உள்ள பிரதான அரசுப் பள்ளிகள் குறைவான தேர்ச்சி பெறும் அவல நிலையை மாற்றி, வரும் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் உயர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com