இந்தியன் மெட்ரிக் பள்ளி நூறு சதம் தேர்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கோபிநாதம்பட்டி கூட்டுசாலை இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கோபிநாதம்பட்டி கூட்டுசாலை இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 இப் பள்ளி மாணவி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். மேலும், இந்தப் பள்ளி மாணவர்கள் 490-க்கு மேல் 16 பேரும், 475-க்கு மேல் 65 பேரும், 450-க்கு மேல் 116 பேரும், 400-க்கு மேல் 185 பேரும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். கணிதம் பாடத்தில் 34 பேரும், அறிவியல் பாடத்தில் 6 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 31 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை இந்தியன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.பழனியப்பன், துணைத் தலைவர் ஏ.கே.பி மூர்த்தி, செயலர் என்.சுப்பிரமணி, பொருளர் சசிகலா மூர்த்தி, நிர்வாக இயக்குநர்கள் என்.முருகேசன், குமாரசாமி, பள்ளி முதல்வர் கோபு, மேலாளர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com