தருமபுரியில் மீண்டும் சிறுத்தை பீதி!

தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பீதி கிளம்பியுள்ளது. ஆனால், இந்தப் பீதியை வனத் துறையினர் முற்றிலும் மறுக்கின்றனர்.
தருமபுரியில் மீண்டும் சிறுத்தை பீதி!

தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பீதி கிளம்பியுள்ளது. ஆனால், இந்தப் பீதியை வனத் துறையினர் முற்றிலும் மறுக்கின்றனர்.

தருமபுரி அதியமான்கோட்டை அருகே மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் முகாம் அலுவலகங்களுக்கு எதிரே உள்ள குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை இரவு ஏதோவொரு விலங்கு சுமார் 18 கோழிகளைக் கொன்றுள்ளது. காலையில் இதை பார்த்தோருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. சில கோழிகளில் மட்டும் காயம் இருக்கிறது. பதிகால்பாளையம் வனப் பகுதியிலிருந்து சிறுத்தை வந்திருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியிலிருந்த கால்தடங்களைப் பதிவு செய்து ஆய்வு செய்தனர். கால்தடங்களின் அடிப்படையில் அவை எதுவும் சிறுத்தையுடையது அல்ல என்றும், ஏதாவது நாய் வகையைச் சேர்ந்த விலங்குகள் கோழிகளைக் கொன்றிருக்கலாம் என்றும் தெரிவித்தார் மாவட்ட வன அலுவலர் க. திருமால்.

9 ஆடுகள் சாவு: இதேபோல, பென்னாகரம் அருகே ஏமனூர் கிராமத்தில் ஆடுகளை அடைத்து வைத்திருந்த பட்டியில் 9 செம்மறி ஆடுகள் சனிக்கிழமை இரவு இறந்தன. மேலும் காயங்களோடு மீட்கப்பட்ட 5 ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆடுகளின் உரிமையாளர் முத்து (50) கூறியது:
 இரவில் ஆடுகளின் சத்தம் கேட்டு வந்தபோது, பட்டியிலிருந்து சிறுத்தையொன்று தப்பியோடியதைப் பார்த்தேன். எனக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை வனத்துறையினர் ஈடுசெய்வதுடன், மேலும் சிறுத்தைகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

என்ன மாதியான விலங்கு ஆடுகளை அடித்திருக்கக் கூடும் என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாக வன அலுவலர் திருமால் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com