அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

தருமபுரி நகராட்சி நிர்வாகம் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்

தருமபுரி நகராட்சி நிர்வாகம் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, அக்கட்சியின் நகரச் செயலர் ஜி. லெனின் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி. நாகராஜன், எஸ். கிரைஸாமேரி, சோ. அருச்சுணன் உள்ளிட்டோர் பேசினர்.
போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
தருமபுரி நகராட்சி எல்லையை விரிவுபடுத்த வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறநகர் பேருந்து நிலையத்தை இடம்மாற்றி நகராட்சி எல்லைக்குள் விரிவடைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
புதை சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். நகரில் உள்ள குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீர்செய்ய வேண்டும். ஒகேனக்கல் குடிநீரை பற்றாக்குறையின்றி அனைத்து வார்டுகளுக்கும் விநியோகிக்க வேண்டும்.
அனைத்து வார்டுகளுக்கும் பொதுக் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். தருமபுரி பேருந்து நிலைய கட்டணக் கழிப்பறையில் நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரில் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்து குப்பைகளை அகற்ற வேண்டும். அனைத்துப் பகுதிக்கும் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அதிகாரிகளிடம் மனுவும் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com