குடிநீர் வழங்கக் கோரி மறியல்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெள்ளச்சந்தை அருகே உள்ளது தண்டுகாரனஅள்ளி கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் உள்ள 3 ஆழ்துளைக் கிணறுகள் மூலம், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த ஆழ்துளைக் கிணறுகள் அண்மையில் வற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாள்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ஒகேனக்கல் குடிநீரும் வரவில்லையாம். இது தொடர்பாôக, ஊராட்சி நிர்வாகத்திடம், முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், திங்கள்கிழமை அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன், தண்டுகாரனஅள்ளி - கிருஷ்ணகிரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து, தகவல் அறிந்த, மாரண்டஅள்ளி போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், குடிநீர் விநியோகத்தை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் தங்களது போராட்டதைக் கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com