ஜூனில் மக்கள் கோரிக்கை மாநாடுகளை நடத்த முடிவு

தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களில், கிராம மக்கள் கோரிக்கை மாநாடுகளை ஜூன் மாதம் முழுவதும் நடத்த தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களில், கிராம மக்கள் கோரிக்கை மாநாடுகளை ஜூன் மாதம் முழுவதும் நடத்த தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
 தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்ட குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் ஜூன் மாதம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம மக்கள் கோரிக்கை மாநாடுகளை நடத்துவது, வரும் ஜூன் 4-ஆம் தேதி அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
 மக்கள் குறைகேட்பு நாள் கூட்டங்களில் அளிக்கப்படும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுத்து, மனுதாரர்களுக்கு முறைப்படி பதில் அனுப்ப வேண்டும். நீதிமன்ற நடவடிக்கையால் நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள மதுக் கடைகளை அகற்றிவிட்டு, கிராமப் பகுதிகளில் மதுக் கடைகள் திறப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்துக்கு, சங்கத்தின் தருமபுரி ஒன்றியச் செயலர் ஜி.பச்சாகவுண்டர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜெ.பிரதாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.பி.புகழேந்தி, நிர்வாகக் குழு உறுப்பினர் என்.முருகேசன் ஆகியோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com