பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து, தருமபுரியில் புதன்கிழமை திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் தனித்தனியாக தொலைத்தொடர்பு நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து, தருமபுரியில் புதன்கிழமை திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் தனித்தனியாக தொலைத்தொடர்பு நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பென்னாகரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.என்.பி.இன்பசேகரன், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச் செல்வன், அவைத் தலைவர் ஜி.வி.மாதையன், முன்னாள் எம்.எல்.ஏ.மனோகரன், தருமபுரி நகரச் செயலர் டி.பி.தங்கராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் த.ஜெயந்தி, முன்னாள் மாவட்டச் செயலர் ராமன், திராவிடர் கழகம் மாவட்டத் தலைவர் இ.மாதன், மாநில பகுத்தறிவாளர் கழகச் செயலர் தகடூர் தமிழ்ச்செல்வி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பேசினர்.
இதில், பண மதிப்பிழக்க நடவடிக்கையை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதன்கிழமை தருமபுரி தொலைத்தொடர்பு நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு தலைமை வகித்துப் பேசினார்.
முன்னாள் மாவட்டத் தலைவர்கள், பாலகிருஷ்ணன், ராஜாராம் வர்மா, நகரத் தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள் பாடிநாகராஜ், மோகன், இளங்கோவன், கனகராஜ் உள்ளிட்டோர் பேசினர். இதில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இடதுசாரி கட்சிகள்: தருமபுரி தொலைத் தொடர்பு நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஆகிய கட்சிகளின் சார்பில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜன் தலைமை வகித்துப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.இளம்பரிதி, இரா.சிசுபாலன், சோ.அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலர்கள் கா.சி.தமிழ்குமரன், ஜெ.பிரதாபன், நிர்வாகிகள் இ.பி.புகழேந்தி, விடுதலை சிறுத்தைகள் மண்டலச் செயலர் பொ.மு.நந்தன், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.வேடியப்பன், முருகன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரியில் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இ.ஜி. சுகவனம் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், திமுக கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் முருகன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com