பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் சேரலாம்

விவசாயிகள் பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம் என அரூர் வேளாண் உதவி இயக்குநர் கே.முருகன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம் என அரூர் வேளாண் உதவி இயக்குநர் கே.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: நடப்பு சம்பா பருவத்தில் இயற்கை இடர்பாடுகளால் பயிர் சேதம் நேரிட்டால் விவசாயிகள் காப்பீடு பெறுவதற்கான வழிவகைகள் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (பிஎம்எப்பிஒய்) வழிவகை செய்கிறது. குத்தகை விவசாயம் செய்யும் விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேரலாம்.
சம்பா பருவத்தில் ஏக்கர் நெல்லுக்கு ரூ.394-யை பிரீமியமாக செலுத்த வேண்டும். இழப்பீடு ஏற்படும் நிலையில், ஏக்கருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.26,500 பெற முடியும். பிரீமியம் செலுத்த கடைசி தேதி 30.11.2017.
விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு எண், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம், பொது சேவை மையங்களில் பிரீமியம் தொகையினை செலுத்தலாம். மேலும் விவரம் அறிய வேளாண் துறை அலுவலகங்களை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com