குடியிருப்புப் பகுதியில் குப்பை கொட்டுவதை நிறுத்தக் கோரி சாலை மறியல்

மொரப்பூரில் குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை நிறுத்தக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மொரப்பூரில் குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை நிறுத்தக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மொரப்பூர் கிராம ஊராட்சியில் சேகரிப்படும் குப்பைகள் சந்தைமேடு அண்ணல் நகரில் கொட்டப்படுகிறது. அந்தப் பகுதியில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் கொட்டுவதற்காக தனித்தனியாக குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.  ஆனால், குப்பைகளை குழியில் கொட்டாமல் குடியிருப்புப் பகுதியில் கொட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில்  துர்நாற்றமும், கொசு உற்பத்தியும் ஏற்பட்டுள்ளது.  
பிளாஸ்டிக் பொருள்களில் மழைநீர் தேங்குவதால் டெங்கு நோய்களை பரப்பும் கொசுப் புழுக்கள் அதிக அளவில் இருப்பதாக புகார் தெரிவித்து, அண்ணல் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் அரூர் - மொரப்பூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து  தகவல் அறிந்து வந்த போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக அரூர் - மொரப்பூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com