தருமபுரி மாவட்டத்தில் இன்றுமுதல் கூட்டுறவு வார விழா தொடக்கம்

அகில இந்திய 64-ஆவது கூட்டுறவு வார விழா தருமபுரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.14) தொடங்கி வரும் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அகில இந்திய 64-ஆவது கூட்டுறவு வார விழா தருமபுரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.14) தொடங்கி வரும் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்
குறிப்பு:
முதல் நாள் செவ்வாய்க்கிழமை கூட்டுறவு மூலம் நல்ஆளுகையும் தொழில் முறையாக்கமும் என்ற தலைப்பில் மாவட்ட மத்தியக் கூ ட்டுறவு வங்கித் தலைமை அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வங்கித் தலைவர் பிஎன்ஏ. கேசவன் கூட்டுறவுக் கொடியேற்றி வைத்துத் தொடக்கி வைக்கிறார். தொடர்ந்து, பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மரம் நடும் விழா நடைபெறுகிறது.
நவ. 15ஆம் தேதி மண்டல இணைப் பதிவாளர் அலுவலகக் கூட்ட மன்றத்தில் உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள் என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற கூடுதல் பதிவாளர் சிவாஜி பேசுகிறார்.
நவ. 16ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெறுகிறது. நவ. 17ஆம் தேதி நடைபெறும் கூட்டுறவு வார விழாவில், மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன், இணைப் பதிவாளர் மா. சந்தானம், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் கி. ரேணுகா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நவ. 18ஆம் தேதி தம்மனம்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.மேலும் அதியமான்கோட்டை, செம்மாண்டகுப்பம், பேகாரஅள்ளி, நாகனூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
நவ. 19ஆம் தேதி பாப்பாரப்பட்டி, ஜக்கமசமுத்திரம், வாசிகவுண்டனூர், சிகரலஅள்ளி ஆகிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் நலிவடைந்தோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான கடன் வழங்கும் கூட்டம் நடைபெறுகிறது.
கடைசி நாளான 20-ஆம் தேதி நகரக் கூட்டுறவு வங்கித் தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com