தருமபுரியில் சிறார் சிறப்புக் காவல் பிரிவு தொடக்கம்: கண்காணிப்பாளர் தகவல்

சட்டத்துடன் முரண்படும் சிறார்களின் வழக்குகளைக் கையாளவும், குற்றங்களில் பாதிக்கப்படும் சிறார்களைப் பாதுகாக்கவும்  தருமபுரி மாவட்டத்தில்

சட்டத்துடன் முரண்படும் சிறார்களின் வழக்குகளைக் கையாளவும், குற்றங்களில் பாதிக்கப்படும் சிறார்களைப் பாதுகாக்கவும்  தருமபுரி மாவட்டத்தில் சிறார் சிறப்புக் காவல் பிரிவு (S​J​PU) தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர் தெரிவித்தார்.
தருமபுரியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
சிறார்  பாதுகாப்புக்காக ஏற்கெனவே சிறார் கடத்தல் தடுப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது. ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களைக் கொண்ட இப்பிரிவு,  ஸ்மைல், முஷ்கான் போன்ற திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும்,  சிறார் சிறப்புக் காவல் பிரிவு (நஒடம) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இப்பிரிவில் ஒரு துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் தலா ஒரு மகளிர் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரைக் கொண்டு இயங்குகிறது.  தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
அனைத்து காவல் நிலையங்களிலும் இப்பிரிவுக்கென ஒரு காவலர் இருப்பார். சிறார் குறித்த வழக்குகள் பதிவாகும்போது, அவர் காக்கிச் சீருடையின்றி இயல்பான உடையில் தொடர்புடைய சிறாரிடம் விசாரணை மேற்கொள்வார். இது நடைமுறை.
மேலும்,  சிறார் குற்றங்களைத் தடுப்பது மற்றும் குறிப்பாக இளம்பெண்களிடம் நடத்தப்படும் வன்முறை குறித்து அனைத்துக் கல்லூரி, பள்ளிகளில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். இதன் மூலம், இளவயது பாலியல் குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.
குறிப்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மாவட்டத்தில் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை 23 வழக்குகளே பதிவாகியுள்ளன.
இவற்றுடன், மாவட்டத்தில் மொத்தம் 214 சிறார் தொடர்புள்ள வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 163 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. காவல் துறை தரப்பில் 51 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. சிறார் காணாமல் போனதாக வந்துள்ள 22 வழக்குகளில் 2 மட்டுமே தொடர் புலன்விசாரணையில் நிலுவையில் உள்ளது .
இந்த நிலையில், சைல்டு லைன் அமைப்புடன் இணைந்து என் நண்பன் வார விழா திங்கள்கிழமை தொடங்கி வரும் நவ. 19ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த வாரவிழாவில், சிறார் பாதுகாப்பு உறுதிமொழியேற்பு, கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பட்டிமன்றம், வாகனப் பேரணி, கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன என்றார் கங்காதர்.
பேட்டியின்போது, சைல்டு லைன் இயக்குநர் ஷைன் தாமஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com