விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரூர் பெரிய ஏரி ராஜகால்வாய் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரூர் பெரிய ஏரி ராஜகால்வாய் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வட்டத் தலைவர் கே.குமரேசன் தலைமை வகித்தார்.  அரூர் பெரிய ஏரியின் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,  18 வார்டுகளிலும் உள்ள கழிவு நீர்க் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும்,  அரூர்  வாரச்சந்தையில்  மேற்கூரைகள் அமைக்க வேண்டும்,
கச்சேரிமேடு, 4 வழிச்சாலை, பழையப்பேட்டை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நவீன வசதியுடன் கூடிய கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும், நகரின் அனைத்து  தெருக்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எம்.முத்து,  மாவட்டப் பொருளாளர் இ.கே.முருகன், வட்ட செயலர் வி.ஆறுமுகம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலர் கே.தங்கராசு,  மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, வட்டக்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.தனலட்சுமி,  வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சி.வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com