தொடர் மழையால் சின்னார்அணை நிரம்பியது

தொடர்மழைக் காரணமாக, தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சின்னார் அணை நிரம்பியது. இதனால் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

தொடர்மழைக் காரணமாக, தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சின்னார் அணை நிரம்பியது. இதனால் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, பெட்டமுகிலாளம், தடிக்கல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால், அப்பகுதிகளில் இருந்து வெள்ளநீர், தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சின்னார்அணையை வந்தடைகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 50 அடியாகும். தற்போது, பெய்து வரும் தொடர்மழைக் காரணமாக அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதில், வியாழக்கிழமை அணையின் மொத்த கொள்ளளவில் 48 அடியை நீர்வரத்து எட்டியது. மேலும், தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்துக் கொண்டிருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி, உபரியாக வரும் 7,850 கன அடி தண்ணீர், சின்னாறு வழியாக வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக சின்னாற்றின் கரையோரமுள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வீடுகளுக்குள் புகுந்த
தண்ணீர்: தருமபுரி மாவட்டத்தில் பரவலாக செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது. இதில் பென்னாகரத்தில் 80 மி.மீட்டர் மழைப் பதிவானது. இதனால், பருவதனஅள்ளி ஏரி வேகமாக நிரம்பி கரை உடைப்பு ஏற்பட்டது. இந்த ஏரியிலிருந்து வெளியேறிய தண்ணீர் அருகிலுள்ள பென்னாகரம் நீதிமன்ற வளாக சுற்றுச் சுவரை உடைத்துக்கொண்டு நீதிமன்றத்தில் புகுந்தது.
அதேபோல, பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட சுண்ணாம்புக்காரத் தெருவில் தாழ்வான பகுதியில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் உறக்கம் இன்றி தவித்த அப்பகுதி மக்கள் வீடுகளில் புகுந்த நீரை வெளியேற்றினர். மேலும், சில இடங்களில் சாலையோரம் இருந்த மரங்களும் முறிந்தன.
மழையளவு: தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையளவு புதன்கிழமை காலை பதிவான நிலவரம் மி.மீட்டரில்: பாலக்கோடு 13, பாப்பிரெட்டிப்பட்டி 13, அரூர் 18.20, தருமபுரி 17, ஒகேனக்கல் 171.40, மாரண்டஹள்ளி 75, ஆட்சியர் அலுவலகம் 34. சராசரி 55.37.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com