மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப அறிவியல் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும்: புதுச்சேரி பல்கலை.பேராசிரியர் கே.பொற்செழியன்

மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப அறிவியல் கண்டுப்பிடிப்புகள் இருக்க வேண்டும் என புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசியர் கே.பொற்செழியன் வலியுறுத்தினார்.

மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப அறிவியல் கண்டுப்பிடிப்புகள் இருக்க வேண்டும் என புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசியர் கே.பொற்செழியன் வலியுறுத்தினார்.
தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், அண்மைக்காலங்களில் ஒளிபொருள்களின் போக்குகள் மற்றும் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் அறிவியல் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு, பெரியார் பல்கலைக்கழக இயற்பியல்துறைத் தலைவர் பி.குமாரதாசன் தலைமை வகித்து பேசினார்.
புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.பொற்செழியன் தொடங்கி வைத்து பேசியது: இன்றைய இந்தியாவின் அறிவியல் போக்கு மற்றும் கண்டுபிடிப்புகள் மக்கள் பயன்பாட்டுக்கேற்ப கண்டறிய வேண்டும். அதற்கான ஆக்கப்பூர்வ சிந்தனையில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். மேலும், ஒளி பொருள்களின் ஆராய்ச்சியில் பல்வேறு பன்முக அறிவினை இளம் மாணவர்கள் வளர்க்க வேண்டும் என்றார்.
அண்ணா பல்கலைக்கழகப் படிக வளர்ச்சி மைய பேராசிரியர் டி.அறிவாளி, பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க இயக்குநர் (பொ) பி.மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். முன்னதாக இயற்பியல் துறை இணை பேராசிரியர் மா.செல்வபாண்டியன் வரவேற்றார். உதவி பேராசிரியர் எம்.பிரசாத் நன்றி கூறினார்.
இதில், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், நாமக்கல், ராசிபுரம், தருமபுரி, அரூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை செங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்பயிற்சிப் பட்டறை வெள்ளிக்கிழமையும் (அக்.13) தொடர்ந்து நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com