புதிய கல்வி மாவட்டத்தை அரூரில் தொடங்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

புதிய கல்வி மாவட்டத்தை அரூரில் தொடங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதிய கல்வி மாவட்டத்தை அரூரில் தொடங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழுக் கூட்டம்,  மாவட்ட துணைச் செயலர் கா.சி.தமிழ்க்குமரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், தருமபுரியை இரண்டாகப் பிரித்து புதிதாக கல்வி மாவட்டம் உருவாக்கப்படும் என்று,  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.  ஆனால்,  புதிய கல்வி மாவட்டத்துக்கான பணிகள்
காரிமங்கலத்தில் நடைபெறுவதாக தெரிகிறது. தருமபுரிக்கும் காரிமங்கலத்துக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 22 கி. மீட்டராகும்.  காரிமங்கலத்தில் புதிய கல்வி மாவட்டம் அமைவதால் எந்த பயனும் இருக்காது.  எனவே, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள மாணவர்கள்,  ஆசிரியர்கள் நலன் கருதி அரூரில் புதிய கல்வி மாவட்டத்தைத் தொடங்க வேண்டும்.
வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஒன்றியச் செயலர் என்.அல்லிமுத்து, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆர்.நடராஜன்,   மாவட்டக்குழு உறுப்பினர் பி.செங்கொடி,  ஒன்றிய துணைச் செயலர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com