விவசாயிகளுக்கு பட்டறிவு பயிற்சி

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு பட்டறிவுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு பட்டறிவுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார, அட்மா திட்டம் சார்பில், நீடித்த நிலையான மானாவாரி இயக்ககத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தேரி கிராமத்திலிருந்து 50 விவசாயிகளை,  பட்டறிவு பயணமாக பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தருமபுரி மாவட்ட சிறுதானிய விவசாயிகள் உற்பத்தியாளர்கள் வணிக சங்கம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்பட்டது.
வட்டார தொழில்நுட்ப மேலாளார் ப.ரவி,  பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர்  பா.சண்முகம்,  தொழில்நுட்ப வல்லுநர் முருகவேல்,  தருமபுரி மாவட்ட சிறு தானிய விவசாயிகள் உற்பத்தியாளர்கள் வணிக சங்கத்தின் மூலம் செயல்படும் சிறு தானியங்கள் மதிப்புக் கூட்டு மையத் தலைவர் சிவலிங்கம் ஆகியோர் விவசாயிகளுக்கு  பயிற்சி அளித்தனர்.
அட்மா திட்ட உதவித் தொழில்நுட்ப  மேலாளர்கள் வசந்தி, சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com