அண்ணா பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம்

அண்ணா பிறந்த நாள் விழா அதிமுக, திமுக, தி.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அண்ணா பிறந்த நாள் விழா அதிமுக, திமுக, தி.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில், மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில், அக்கட்சியினர் தருமபுரி- திருப்பத்தூர் சாலையிலிருந்து ஊர்வலமாக சென்று நான்குமுனை சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதேபோல, திமுக மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், அக்கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.
அதிமுக டிடிவி தினகரன் அணி சார்பில் அண்மையில் மாவட்டச் செயலராக அறிவிக்கப்பட்ட டி.கே.ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் நான்குமுனை சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திராவிடர் கழகம் சார்பில், மாநில பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில அமைப்புச் செயலர் ஊமை ஜெயராமன், மண்டச் செயலர் கருபாலன் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஒசூரில்... கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஒசூர் வட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்டச் செயலரும், தளி எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ் தலைமை வகித்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுக சார்பில் ஒசூர் நகரச் செயலர் எஸ்.நாராயணன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அரூரில்... கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலர் எஸ்.ராஜேந்திரன் தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
அதிமுக சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு ஒன்றியக் கழக முன்னாள் செயலர் வி.ஜெயப்பிரகாசம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஊத்தங்கரையில்... சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
திமுக சார்பில் வடக்கு ஒன்றிய செயலர் எக்கூர் செல்வம், தெற்கு ஒன்றிய செயலர் சாமிநாதன் ஆகியோர் தலைமையில் நான்குமுனை சாலை சந்திப்பில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக அம்மா அணி சார்பில் மாவட்ட துணைச் செயலர் ஜி.எ.செல்வராஜ் தலைமையில் நான்குமுனை சாலை சந்திப்பில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com