பெங்களூரில் உள்ள பேருந்து நிலையத்துக்கு பெரியாரின் பெயர் சூட்டப்படும்: அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பெங்களூரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்துக்கு ஈ.வெ.ரா. பெரியாரின் பெயர் சூட்ட ப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

பெங்களூரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்துக்கு ஈ.வெ.ரா. பெரியாரின் பெயர் சூட்ட ப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரு அரசு ஊழியர்கள் மாளிகையில் வெள்ளிக்கிழமை தலித் சங்கர்ஷ சமிதியின் சார்பில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவில் பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசியது:
திராவிட கலாசாரம் வளர வேண்டும் என்பதற்காகவும், சமூக நீதிக்காகவும் தந்தை பெரியார் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அவர் நடத்திய போராட்டங்களின் விளைவாக தற்போது பல்வேறு பலன்களை நாம் அனுபவித்து வருகிறோம். அவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் போராட்டங்களால் நாட்டின் பெரும் புரட்சியே ஏற்பட்டது. அவரின் கொள்கைகளை இளைஞர்கள் தொடர்ந்து பின்பற்றி நடக்க வேண்டும். பெங்களூரில் ஒரு பேருந்து நிலையத்துக்கு பெரியாரின் பெயர் சூட்டப்படும். மூட நம்பிக்கையைத் தடுக்கும் வகையில் கர்நாடக அரசு சட்ட மசோதாவை கொண்டு வர முடிவு செய்துள்ளது. மக்கள் மூட நம்பிக்கைகளிலிருந்து விலகி, புத்தர், பெரியார், அம்பேத்கரின் வழியைப் பின்பற்றி வாழ வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மூத்த சிந்தையாளர் கே.எஸ்.பகவான், தலித் சங்கர்ஷ சமீதியின் தலைவர் எச்.மாரப்பா, காங்கிரஸ் பிரமுகர் உதயசங்கர், தம்மையா, எச்.விஸ்வநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com